2022 ல், இந்தியாவின் காபி ஏற்றுமதி 2% உயர்வு

January 2, 2023

இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு காபி ஏற்றுமதி 2% உயர்ந்து, 4 லட்சம் டன் அளவில் உள்ளதாக இந்திய காபி போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, 3.93 லட்சம் டன் அளவில் இருந்த இந்தியாவின் காபி ஏற்றுமதி, தற்போது 4 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 2021ல் 6984.67 கோடி ரூபாயாக இருந்த காபி ஏற்றுமதி மதிப்பு 2022ல் 8762.47 கோடியாக உயர்ந்துள்ளது. இன்ஸ்டன்ட் காபி வகை மட்டுமல்லாது, ரோபஸ்டா, […]

இந்தியாவின் 2022 ஆம் ஆண்டு காபி ஏற்றுமதி 2% உயர்ந்து, 4 லட்சம் டன் அளவில் உள்ளதாக இந்திய காபி போர்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3.93 லட்சம் டன் அளவில் இருந்த இந்தியாவின் காபி ஏற்றுமதி, தற்போது 4 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 2021ல் 6984.67 கோடி ரூபாயாக இருந்த காபி ஏற்றுமதி மதிப்பு 2022ல் 8762.47 கோடியாக உயர்ந்துள்ளது.

இன்ஸ்டன்ட் காபி வகை மட்டுமல்லாது, ரோபஸ்டா, அரபிக்கா வகையிலான காபி ஏற்றுமதியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ரோபஸ்டா காபி ஏற்றுமதி 220974 டன்களாகவும், அரபிக்கா காபி ஏற்றுமதி 44542 டன்களாகவும் பதிவாகியுள்ளது. ரோபஸ்டா ஏற்றுமதியில் 1% மற்றும் அரபிக்கா ஏற்றுமதியில் 11.43% சரிவு பதிவாகியுள்ளது. அதே வேளையில், இன்ஸ்டன்ட் காபி ஏற்றுமதியில் 16.73% உயர்வு பதிவாகி, 35810 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காபி உற்பத்தியும் இந்தியாவில் உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu