கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பிப்ரவரி 8 மற்றும் 10ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் காலை 9:35 மற்றும் 11.50 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் மறு மார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை காலை 10:55 மணிக்கும், பகல் 12.55 மணிக்கும் இயக்கபட்டு வருகிறது. இதில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10ம் தேதிகளில் இந்த ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது