கோவையில் 'ஸ்டேஷன் ஹாப்பினஸ் ஆபீசர்ஸ்' நியமனம்

கோவையில் அனைத்து நிலையங்களிலும் ஸ்டேஷன்ஸ் ஹேப்பினஸ் ஆபிஸர் என்ற மகிழ்ச்சி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அனைத்து போலீசார்களின் மன அழுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், மகிழ்ச்சி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் மகிழ்ச்சி அதிகாரிகள் பலரும் கலந்து […]

கோவையில் அனைத்து நிலையங்களிலும் ஸ்டேஷன்ஸ் ஹேப்பினஸ் ஆபிஸர் என்ற மகிழ்ச்சி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அனைத்து போலீசார்களின் மன அழுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், மகிழ்ச்சி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் மகிழ்ச்சி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதில் மன அழுத்தத்தை எவ்வாறு போக்குவது என்பது குறித்து டாக்டர் குழுக்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் போலீசாரின் மன அழுத்தத்தை தவிர்க்க வார விடுமுறை, வீடுள்ள இடத்திற்கு பணி மாறுதல், காவல் நிலையத்தில் குடும்பத்தினர் சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து போலீஸ் காவல் நிலையங்களும் நிலையங்களிலும் மகிழ்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதேபோலீஸ் நிலையத்தில் பணி புரிபவர்களாகவும், போலீசார் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நன்கு அறிந்தவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் மன அழுத்த பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக அறிவுரை வழங்கப்பட்டு அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu