சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாகத் தோன்றிய வால் நட்சத்திரம் C/2023 A3 (Tsuchinshan-ATLAS) தற்போது மீண்டும் பூமிக்கு அருகில் வருகிறது. பொதுவாக, வெள்ளி முதல் திங்கள் வரை அதிகாலை வானில் வெறும் கண்களால் இந்த வால் நட்சத்திரத்தை பார்க்கலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் தனது கேமராவில் இந்த வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளார்.
இந்த வால் நட்சத்திரம், நிலவுக்கு அடியில் தெளிவற்ற நட்சத்திரம் போலத் தெரியும் என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள். தொலைநோக்கியை பயன்படுத்தினால் இதை தெளிவாகக் காணலாம். செப்டம்பர் 28 அன்று இந்த வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும். அக்டோபர் 10 ஆம் தேதி மாலை வானில் இதை மிகத் தெளிவாகக் காணலாம். இந்த வால் நட்சத்திரத்தை காணும் வாய்ப்பு மிகவும் அரிதானது என்பதால், வானியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.