ரேகா ஜூன்ஜுவாலாவின் கான்கார்ட் பயோடெக் பங்குச்சந்தையில் இன்று வெளியானது

August 18, 2023

ரேகா ஜூன்ஜுவாலாவின் ஆதரவில் இயங்கும் கான்கார்ட் பயோடெக் லிமிடெட் நிறுவனம், இன்று முதல் முறையாக பங்கு சந்தையில் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் அறிமுகம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முதல் பகுதியில் 33.3% வரை நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயின. மேலும், நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கான்கார்ட் பயோடெக் நிறுவனத்தின் அறிமுக விலையாக, ஒரு பங்கு 900.05 ரூபாய்க்கு வெளியானது. இது, நிறுவனத்தின் பொது பங்கீட்டின் போது சொல்லப்பட்ட […]

ரேகா ஜூன்ஜுவாலாவின் ஆதரவில் இயங்கும் கான்கார்ட் பயோடெக் லிமிடெட் நிறுவனம், இன்று முதல் முறையாக பங்கு சந்தையில் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் அறிமுகம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முதல் பகுதியில் 33.3% வரை நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயின. மேலும், நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கான்கார்ட் பயோடெக் நிறுவனத்தின் அறிமுக விலையாக, ஒரு பங்கு 900.05 ரூபாய்க்கு வெளியானது. இது, நிறுவனத்தின் பொது பங்கீட்டின் போது சொல்லப்பட்ட 741 ரூபாயை விட 21% கூடுதல் பிரிமியத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இன்றைய வர்த்தகத்தில் உச்சபட்சமாக, ஒரு பங்கு 987.7 ரூபாய் வரை உயர்ந்தது. அதன்படி, நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாகவும், அதே எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu