இந்தியா கூட்டணியில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இவர்களுக்குள் குஜராத், டெல்லி, ஹரியானா, சண்டிகர், கோவா மாநிலங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி எந்தெந்த தொகுதிகள் இவர்களுக்குள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் நான்கில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, நியூ டெல்லி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும், வடமேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். குஜராத்தில் உள்ள 26 இடங்களில் 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. அரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் போட்டியிடும். ஆம் ஆத்மி ஒரு இடத்தில் போட்டியிடும். சண்டிகரில் உள்ள ஒரு இடத்தில் காங்கிரஸ் போட்டியிடும். கோவாவில் உள்ள இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிடும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.