கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை, ஜார்க்கண்ட் சட்டசபை, வயநாடு மக்களவை இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் வாக்குகள் இன்று நடைபெறுகின்றன. அதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடகா இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதில் சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார். ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார். சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ. அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்தார்.