பானி பூரியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதால் அவை புற்றுநோயை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், கர்நாடக மாநில அரசு பானி பூரியை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறைக்கு பானி பூரியில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக புகார் வந்தது. இதை அடுத்து, கிட்டத்தட்ட 276 கடைகளில் பானிபூரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 41 கடைகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான செயற்கை நிறமூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 18 கடைகளின் பானி பூரிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவையாக இருந்துள்ளன. அத்துடன், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த பானி பூரி அளவில் 52% பானிபூரிகள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என தெரியவந்துள்ளது. எனவே, தகுதியற்ற பானிபூரியை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பானி பூரியை தடை செய்யவும் திட்டமிட்டு வருவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.