லிஸ் ட்ரஸை பதவியிலி௫ந்து நீக்க நினைப்பது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது. இ௫ப்பினும் கன்சர்வேடிவ் எம். பி க்கள் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸை வெளியேற்ற முயற்சிப்பார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற 2016 ம் நடந்த தேர்தலில் இருந்து மூன்று பிரதமர்களை இழந்துள்ளது. இந்நிலையில் லிஸ் ட்ரஸ் தலைமையின் மீது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை அனுமதிக்கும் வகையில் கட்சி விதிகளை மாற்றுமாறு கன்சர்வேடிவ் எம். பி க்கள் கட்சியின் தலைவரை வலியுறுத்துவார்கள் என்று செய்தி ௯றுகிறது.
அதாவது கன்சர்வேடிவ் கட்சியின் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் கமிட்டி தலைவரான கிரஹாம் பிராடியிடம், ட்ரஸ் மீதான நம்பிக்கையில்லாக் கடிதங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தனித்தனியாக, சில கட்சியினர் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக புதிய தலைவரைக் கொண்டு வருவது குறித்து இரகசிய விவாதங்களை நடத்தியதாக செய்தி வந்துள்ளது. மறுபுறம், லிஸ் ட்ரஸ், புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் ஜெர்மி ஹன்ட் உடன் சேர்ந்து, பட்ஜெட்டில் பொருளாதார உத்திகள் வகுக்கும் வாய்ப்பிற்கு தகுதியானவர் என்று வாதிட்டு, கட்சி தலைவர் கிரஹாம் இத்தகைய நடவடிக்கையை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றிபெற்ற டிரஸ், வரிகளைக் குறைப்பதாக உறுதியளித்து, அதனை செயல்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டதால் கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சி பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.