டெல்லியில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வரம்பை விட 100 மடங்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் சரிந்து நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. நிகழ் நேர காற்று தர குறியீடு டெல்லியில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேல் உள்ளது. இதில் டெல்லியில் உள்ள வஜிப்பூர் கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்சமாக 859 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட வரம்பை விட 96.2 சதவீதம் அதிகம் ஆகும். இதன் செறிவு நிலை பி எம் 2.5 ஆக உள்ளது. மேலும் தொடர்ந்து நான்காவது நாளாக 500 ஐ தாண்டியுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.