2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஒரு நாளுக்கு 13 லட்சம் கோடி பேரல் உற்பத்தியை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ரஷ்யா, சலுகை விலையில் கச்சா எண்ணையை விற்று வருவதால், இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கச்சா எண்ணெய் மதிப்பை உயர்த்தும் நோக்கில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன. உற்பத்தி குறைக்கப்படுவதால், கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும் என கருதப்படுகிறது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கான சம நிலையை உறுதி செய்ய, ஓபெக் நாடுகள் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அந்த நாடுகளுக்கு உறுதுணையாக சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இணைந்துள்ளன. அமெரிக்காவை எதிர்த்து, சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முற்பட்டு உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.














