சென்னையில் செயல்பட்டு வந்த பழைய சர்வதேச விமான முனையம் சீரமைக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.
சென்னையில் ஜூன் மாதம் நவீன வசதியுடன் புதிய ஒருங்கிணைத்த வெளிநாட்டு விமான மையம் திறக்கப்பட்டது. ஜூலை மாதம் முதல் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய சர்வதேச விமானம் நிலையம் மூடப்பட்டது. தற்போது உள்நாட்டு முனையத்தில் இரண்டாவது தளத்தில் புறப்பாடு பகுதியும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பழைய விமான நிலையத்தை சீரமைத்து இரண்டாவது புதிய உள்நாட்டு முனையமாக மாற்ற முடிவு செய்தனர். அதன்படி அங்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளன. இதனால் பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.