மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 போலீசருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் 14 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 492 நான் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். காவலர்களில் 54 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது இதில் 14 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் காவலர் பயிற்சி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில் இவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவர்களின் ரத்தம் மாதிரி டெங்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது டெங்கு காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது முடிவுகளுக்கு பிறகு தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.














