அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தல்

May 19, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, சட்டவிரோத குடியேற்றத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அமெரிக்காவில் இருந்து 332 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு, மூன்று விமானங்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் சிலரை கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது அமெரிக்கா புதிய திட்டத்தின்படி, இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த உள்ளது. மத்திய ஆசிய […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, சட்டவிரோத குடியேற்றத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இதுவரை அமெரிக்காவில் இருந்து 332 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு, மூன்று விமானங்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் சிலரை கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது அமெரிக்கா புதிய திட்டத்தின்படி, இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த உள்ளது. மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200 பேர் நாளை ராணுவ விமானத்தில் கோஸ்டாரிகாவின் ஜுவன் சண்டமரினா விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கிருந்து அகதிகள் முகாமில் தங்கவைத்து, பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும். இதில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை. கோஸ்டாரிகா, சட்டவிரோத குடியேற்றிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் இடமாக அமெரிக்காவுக்கு உதவுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu