இங்கிலாந்தில் புதுவகை கொரோனா தொற்று பரவுவதால் அரசு தடுப்பூசியை வேகப்படுத்தகிறது.
இங்கிலாந்தில் கொரோனா மாறுபாடு BA.2.86 பரவுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து இன்றே தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி விட்டது. இதுகுறித்து அந்நாட்டு தேசிய சுகாதார அமைப்பு கூறுகையில், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டில் இருந்து வருபவர்களுக்கு இந்த வாரத்திலி ருந்து தடுப்பூசி செலுத்தப்படும். அதிக பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தது. அதோடு பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும் வருடாந்திர ப்ளூ தொற்றுக்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்துவதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த புது மாறுபாடு வைரஸ் எத்தகைய தன்மை உடையது என்பது தெரியாததால் மக்களாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குனர் ஸ்டீவ் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு நார்ஃபோல்க் பகுதியில் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் 33 பேருக்கு புது கொரோனா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.