உத்தராகண்டில் ஜோஷிமத்தை தொடர்ந்து கர்ணபிரயாக் நகரிலும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகர் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்தராகண்டின் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பகுகுணா நகரில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோஷிமத் நகரில் 678 வீடுகளில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு கருதி 81 குடும்பங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன. ஜோஷிமத் நகரப் பகுயிதில் 213 அறைகள் தற்காலிகமாக வாழத் தகுந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளளவு 1191 என மதிப்பிடப்பட்டுள்ளது.