காயின்பேஸ் கிரிப்டோ நிறுவனத்தில் 950 பேர் பணி நீக்கம்

January 11, 2023

பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனமான காயின்பேஸ் , 950 எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் இந்த நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மூன்றாவது சுற்று பணி நீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முதல் கிரிப்டோ சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. உலகளாவிய முறையில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் […]

பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனமான காயின்பேஸ் , 950 எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் இந்த நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மூன்றாவது சுற்று பணி நீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் முதல் கிரிப்டோ சந்தை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. உலகளாவிய முறையில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதன் பகுதியாக, காயின்பேசில் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்காக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 149 முதல் 163 மில்லியன் டாலர்கள் வரை சீரமைப்பு செலவுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu