ரஷியாவின் ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தங்கள் நாட்டு மக்களுக்கு தடை விதிக்கிறது.
ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் பிற நாட்டவர்கள் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்டை நாடான கியூபாவில் சட்ட விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அந்த நாட்டின் தூதர் ஜூலியோ அன்டோனியோ கூறுகையில், கியூபா நாட்டவர்கள் ரஷிய ராணுவத்தில் சட்டப்பூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இதில் சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். எனவே இந்த சட்ட விரோத செயல்களில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்றார்.