க்யூட்' நுழைவுத் தேர்வு: செப்டெம்பர் 15ல் முடிவுகள் வெளியாகும்

September 10, 2022

மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தியது. இது குறித்து, பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியிடப்படும். இதற்கான […]

மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நடந்த, 'க்யூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியாகும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்தன. இந்த தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தியது.

இது குறித்து, பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:இளநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள், வரும் 15ல் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து, தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்து வருகிறது.மத்திய பல்கலைகள் அனைத்தும், தேர்வு முடிவுகள் அடிப்படையில், சேர்க்கைக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவங்க வேண்டும். தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதுடன், பல கட்டங்களாகவும் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, முடிவுகள் வெளியாவது தாமதமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu