காசா முனையை இரண்டாக பிரித்து விட்டோம் - இஸ்ரேல்

November 6, 2023

காசா முனையை இரண்டாக பிரித்து விட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ படை செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், காசாவில் முக்கியமான இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகிறோம். காசாமுனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாக அதை பிரித்து விட்டோம். எந்த நேரமும் நாங்கள் வடக்கு காசா மீது தாக்குதல் நடத்துவோம். கடற்கரை ஒட்டிய பகுதிகளை தற்போது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். […]

காசா முனையை இரண்டாக பிரித்து விட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ படை செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், காசாவில் முக்கியமான இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகிறோம். காசாமுனை பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என இரண்டாக அதை பிரித்து விட்டோம். எந்த நேரமும் நாங்கள் வடக்கு காசா மீது தாக்குதல் நடத்துவோம். கடற்கரை ஒட்டிய பகுதிகளை தற்போது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது ஹமாஸ் அமைப்பினருக்கு சொந்தமான சுரங்கங்கள் மற்றும் தளவாடங்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று காசாவில் மாகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் எட்டு குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். இந்த போரில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். காஜாவில் தற்போது தகவல் தொடர்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 48 மணி நேரத்திற்குள் காசாவிற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நுழைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu