இந்தியாவில் 1 லட்சம் சைபர் குற்றங்கள் மூலம் ரூ.17 ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் பெரிதும் அதிகரித்து உள்ளன. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன, இதில் பெரும்பாலும் நிதி மோசடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மோசடிகளின் மூலம் ஒரே ஆண்டில் ரூ.17 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்யப்பட்டுள்ளன. இது, இந்திய வங்கிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஆன்லைன் மோசடி சம்பவங்களில் பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 4.5 லட்சம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியிலும் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது, வங்கிகளுக்கு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.