மியான்மர் - மோச்சா புயலால் 6 பேர் பலி - 700க்கும் மேற்பட்டோர் காயம்

வங்கக் கடலில் உருவான மோச்சா புயல், நேற்று மதியம் மியான்மர் நாட்டில் கரையை கடந்தது. அந்நாட்டில் உள்ள ராகின் மாகாணத்தில், புயல் கரையை கடந்தது. இந்த புயலால், வெள்ளப்பெருக்கு, தொலை தொடர்பு சேவைகள் பாதிப்பு, மரங்கள் சரிந்து விழுந்தது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ள தகவல் படி, இதுவரை புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த […]

வங்கக் கடலில் உருவான மோச்சா புயல், நேற்று மதியம் மியான்மர் நாட்டில் கரையை கடந்தது. அந்நாட்டில் உள்ள ராகின் மாகாணத்தில், புயல் கரையை கடந்தது. இந்த புயலால், வெள்ளப்பெருக்கு, தொலை தொடர்பு சேவைகள் பாதிப்பு, மரங்கள் சரிந்து விழுந்தது போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ள தகவல் படி, இதுவரை புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இந்த புயலில் சிக்கி, 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மியான்மர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் உள்ள கடற்கரை பகுதி மோச்சா புயலால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, 10க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் மற்றும் கடல் நீர் வடியவில்லை என்று கூறப்படுகிறது. மக்கள் உயரமான பகுதிகளில் மற்றும் வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu