தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு புதிய உச்சம்

தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு அளவு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. பொதுவாக, தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு அளவு 300 மில்லியன் யூனிட் அளவில் இருக்கும். கோடை காலத்தில் 350 மில்லியன் யூனிட்டாக உயரும். கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு முதல் முறையாக 423.785 மில்லியன் யூனிட்டுக்களாக பதிவானது. இந்த நிலையில், கடந்த மார்ச் 29 ம் தேதி, தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 426.438 மில்லியன் யூனிட்டுக்களாக […]

தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு அளவு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு அளவு 300 மில்லியன் யூனிட் அளவில் இருக்கும். கோடை காலத்தில் 350 மில்லியன் யூனிட்டாக உயரும். கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, தமிழ்நாட்டின் தினசரி மின் நுகர்வு முதல் முறையாக 423.785 மில்லியன் யூனிட்டுக்களாக பதிவானது. இந்த நிலையில், கடந்த மார்ச் 29 ம் தேதி, தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 426.438 மில்லியன் யூனிட்டுக்களாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் 2ம் தேதி, 430.13 மில்லியன் யூனிட் ஆக மற்றொரு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, நிகழாண்டின் கோடை காலம் தொடங்கும் முன்பாகவே, மின் நுகர்வு அதிகரித்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின்சார தேவை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu