மல்டிவிட்டமின் சப்ளிமெண்ட்டால் வாழ்நாள் நீடிக்காது - ஆய்வு தகவல்

ஊட்டச்சத்து மாத்திரைகள் என்று அழைக்கப்படும் மல்டிவிட்டமின் சப்ளிமெண்ட் உட்கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தினசரி உட்கொள்ளப்படும் மல்டிவிட்டமின்களால் வாழ்நாள் அளவு நீடிக்காது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. JAMA Network Open இல் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், மல்டிவிட்டமின் பயன்படுத்துவதால் வாழ்நாள் அளவு நீடிக்கும் என்பதற்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், […]

ஊட்டச்சத்து மாத்திரைகள் என்று அழைக்கப்படும் மல்டிவிட்டமின் சப்ளிமெண்ட் உட்கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தினசரி உட்கொள்ளப்படும் மல்டிவிட்டமின்களால் வாழ்நாள் அளவு நீடிக்காது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

JAMA Network Open இல் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், மல்டிவிட்டமின் பயன்படுத்துவதால் வாழ்நாள் அளவு நீடிக்கும் என்பதற்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் இறுதியில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மல்டிவிட்டமின் உட்கொள்பவர்களுக்கு மற்றவர்களை விட 4% அளவுக்கு மரண வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu