விரைவில், அதிசக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நாசா (NASA) மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் (NOAA) ஆகியவை இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, சூரியனில் 3 புள்ளிகள் உருவாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் 3536, 3539, 3540 என இந்தப் புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து சீரற்ற முறையில் பீட்டா மற்றும் காமா கதிர்கள் வெளிப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக, எம் அல்லது எக்ஸ் ரக சூரிய புயல் பூமியை தாக்கலாம் என தெரிவித்துள்ளனர். எம் ரக புயலுக்கு 45% மற்றும் எக்ஸ் ரக புயலுக்கு 10% அளவில் சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இத்தகைய அதிசக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியைத் தாக்கினால், தொலை தொடர்பு சேவைகள் மற்றும் மின்சார சாதனங்கள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.