சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சூப்பர் பக் என்று அழைக்கப்படும் பாக்டீரியா உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது அங்கு தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜூன் 5-ம் தேதி, ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணப்பட்டனர். இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் சூப்பர் பக் என்று அழைக்கப்படும் ஒரு வகை பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் சூப்பர் பக் பாக்டீரியா பொதுவாக காணப்படுவது தான். ஆனால், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற மூடிய சூழலில், இந்த பாக்டீரியா மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.