கிறிஸ்துமஸ் தினத்தில் பூமியைத் தாக்கும் சோலார் புயல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

December 24, 2022

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நேரத்தில், உலகின் பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் சில பகுதிகளில் அண்டார்டிகாவை விட கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர், இதன் மூலம், பண்டிகை கால திட்டங்கள் அனைத்தும் மாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘சி’ கிளாஸ் சோலார் பிளேர் நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், பூமியின் காந்தப்புலம் பாதிப்படைந்து, தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கும் நிலை […]

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நேரத்தில், உலகின் பருவ நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் சில பகுதிகளில் அண்டார்டிகாவை விட கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர், இதன் மூலம், பண்டிகை கால திட்டங்கள் அனைத்தும் மாற்றப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘சி’ கிளாஸ் சோலார் பிளேர் நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், பூமியின் காந்தப்புலம் பாதிப்படைந்து, தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், சர்வதேச விமானப் போக்குவரத்து மாற்றப்படலாம். எனவே, பண்டிகை கால சுற்றுலா கொண்டாட்டங்கள் தடைபடும் நிலை உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய புயலால், பூமியின் உயர் அட்சரேகை பகுதிகள் 25% பாதிக்கப்படும் என்றும், மத்திய அட்சரேகை பகுதிகள் 10% பாதிக்கப்படும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu