கடந்த சனிக்கிழமை, சோமாலியா நாட்டில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மருத்துவமனைக்கு, விமான மூலம் காயம் அடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய சோமாலியா பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிக்கு அருகில் ட்ரக் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சோமாலியா நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வரும் அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இது அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு தீவிரவாத அமைப்பாகும்.