துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், ஒரு ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் நேற்று பரபரப்பான தீ விபத்து ஏற்பட்டது. 2 வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்திலிருந்து 66 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த படுகாயமடைந்தவர்களில் சிலர் உயிரிழந்ததுடன், பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. 45 பேரின் அடையாளம் கண்டுள்ளனர். தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.














