சிக்கிம் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

October 7, 2023

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். 140 பேர்களை காணவில்லை.வடக்கு சிக்கும் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதில் சுங் தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது.இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பாலங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 23 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாயமானவர்களை தேடும் […]

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். 140 பேர்களை காணவில்லை.வடக்கு சிக்கும் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதில் சுங் தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது.இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பாலங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 23 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதில் இதுவரை 53 பேர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 140 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் அவர்களை தேடும்படி தீவிரமாக நடந்து வருவதாகவும் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மலையில் 1173 வீடுகள் சேதமடைந்துள்ளன. 6875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2413 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு சிக்கியுள்ள 3000 சுற்றுலாப் பயணிகளையும் மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu