சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் - தமிழகம் 2வது இடம்

நாட்டிலேயே அதிகமான சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2021ல் 4,03,116 சாலை விபத்துகளும், , 17,933 ரயில் விபத்துகளும், 1,550 விபத்துகள் தண்டவாளத்தை […]

நாட்டிலேயே அதிகமான சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 2021ல் 4,03,116 சாலை விபத்துகளும், , 17,933 ரயில் விபத்துகளும், 1,550 விபத்துகள் தண்டவாளத்தை கடக்கும்போதும் ஏற்பட்டது ஆகும். 2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இறப்பு விகிதத்தைப் பொருத்தவரை உத்தரப்பிரதேசத்தில் 24,711 பேரும், தமிழகத்தில் 16,685 பேரும், மகாராஷ்டிராவில் 16,446 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமே முறையே 14.2%, 9.6% மற்றும் 9.5% சாலை விபத்து உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. 2017 முதல் பெறப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 2017 முதல் 2019 வரை சாலை விபத்து மரணங்கள் மிகமிக அதிகமாக இருந்தன. 2020ல் சாலை விபத்துகள் வெகுவாகக் குறைந்தது. பின்னர் 2021ல் அவை மீண்டும் அதிகரித்துள்ளது. 2020ல் சாலை விபத்து மரணங்கள் 1,46,354 ஆக இருந்தது. இது 2021ல் 1,73,860 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu