இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி மதிப்பு 19433 கோடியாக சரிவு

January 18, 2023

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் நவரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மதிப்பு, வருடாந்திர அடிப்படையில் 11.25% சரிந்து, 19432.88 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த நவம்பர் மாதத்தில் 11.83% உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்களை ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுவாகவே, விழாக்காலம் என்பதால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவின் நகை ஏற்றுமதி அதிகமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் நவரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மதிப்பு, வருடாந்திர அடிப்படையில் 11.25% சரிந்து, 19432.88 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த நவம்பர் மாதத்தில் 11.83% உயர்ந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்களை ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுவாகவே, விழாக்காலம் என்பதால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவின் நகை ஏற்றுமதி அதிகமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 6.28% உயர்ந்து, 227534.5 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, நடப்பு நிதி ஆண்டில் 40% சரிவு பதிவாகியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, வருடாந்திர அடிப்படையில் 21.5% சரிந்து, 10472.92 கோடியாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu