அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 1021 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார் இதற்காக 197.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்பட உள்ளனர்
இந்த மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மூன்றாம் தேதி நடைபெறும் எனவும், 4ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.