தமிழக அரசு, மார்ச் 2025 மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது
தமிழக அரசு, மார்ச் 2025 மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது. இத்தகவலை அரசாங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதைக் கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் முழுவதும் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவுகள் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.
மேலும், இந்த சனிக்கிழமைகளில் ஆவண பதிவுகளுக்கான கட்டணமாக விடுமுறை நாள் கட்டணம் சேர்க்கப்படும். முக்கியமாக, ஒவ்வொரு அலுவலகத்திலும் முன்பதிவு வில்லைகள் பொதுமக்களுக்காக வழங்கப்படும். 100 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்களுடன் செயல்படும் அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.