பிரிட்டனில் உள்ள வேல்ஸ் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மிகப்பெரிய எரிகலன்கள் உள்ளது. அதனை மூடுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 3000 பேர் வேலை இழக்க உள்ளனர்.
போர்ட் தால்போட்டில் உள்ள எரிகலன்களை டாடா ஸ்டீல் மூட உள்ளது. இவற்றை தொடர்ந்து இயக்குமாறு தொழிற்சங்கங்கள் வகுத்த திட்டங்களை மறுத்து, டாடா ஸ்டீல் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், 3000 பேர் வேலை இழக்க உள்ளனர். கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த எரிகலன்கள் நிறுத்தப்படுவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் மின்சார எரிகலன்கள் கொண்டு ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட போவதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. இந்த பணி நீக்கம் குறித்த விவாதம் தொடர்பாக டாடா ஸ்டீலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட போதும், தொடர்ந்து எரிகலன்களை மூடவே டாடா ஸ்டீல் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.