இந்தியாவில் முதல்முறையாக ஆளில்லா விமான பயிற்சி சோதனை மையம்

August 2, 2023

ஆளில்லா விமான பயிற்சி சோதனை மையம் இந்தியாவில் முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லா விமான பயிற்சி மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் துறை கட்டுப்பாட்டில் இந்த மையம் அமைவதால் தமிழ்நாட்டுக்கு, இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக இருக்கும். ராணுவத்தில் யு.ஏ.வி எனப்படும் ஆளில்லா […]

ஆளில்லா விமான பயிற்சி சோதனை மையம் இந்தியாவில் முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லா விமான பயிற்சி மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மையத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் துறை கட்டுப்பாட்டில் இந்த மையம் அமைவதால் தமிழ்நாட்டுக்கு, இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக இருக்கும்.

ராணுவத்தில் யு.ஏ.வி எனப்படும் ஆளில்லா விமானம் முக்கிய அம்சமாக உள்ளது. இது ட்ரோன் தொழில்நுட்பத்தின் மேம்படுத்த பிரிவாகும். இவ்வகை விமானங்கள் இலக்கை நோக்கி திரும்புவதில் சிறப்பாக செயல்படுகின்றன.

இதனை இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்க, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாளவும், இந்திய பெருங்கடலில் வெளிநாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பயன்படுத்த உள்ளது. இதற்குவெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் தற்போது மத்திய அரசு உள்நாட்டிலேயே புதிதாக ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் அந்தஸ்து உயர்த்துவதற்கான ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu