பஞ்சதந்திர கதைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலக குழுவின் பத்தாவது கூட்டம் நடைபெற்றது. இதில் துளசிதாசர் எழுதிய ராமசரித மனாஸ், விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகளின் கையெழுத்து பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இந்தியா சார்பில் பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் விவாதங்களுக்கு பிறகு ராம சரித மனாஸ் பஞ்சதந்திர கதைகள் ஆகியவை ஆசிய மற்றும் பசிபிக் நினைவு உலக பதிவேட்டில் இடம் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது