டெல்லி விவசாயிகள் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

February 22, 2024

டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13ஆம் தேதி முதல் பேரணி சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை அடுத்து பஞ்சாப் - அரியானா இடையே சம்பு எல்லையில் விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதன் இடையில் விவசாயிகள் போராட்டத்தை […]

டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13ஆம் தேதி முதல் பேரணி சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை அடுத்து பஞ்சாப் - அரியானா இடையே சம்பு எல்லையில் விவசாயிகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதன் இடையில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 21 வயதான விவசாயி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசு ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu