டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கருவியில் 326-ஆக பதிவு

November 7, 2022

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிப்பதால் காற்றின் தரக் குறியீடு கருவியில் 326-ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில், காற்று மாசு அட்டவணையில் கடுமையான மாசு என்ற நிலையில் இருந்து மிகமோசம் என்ற நிலைக்கு காற்றின் தரம் சென்றுள்ளது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ள நொய்டாவில் காற்று தர குறியீடு 356 (மிக மோசம் பிரிவில்) ஆக உள்ளது. குருகிராமில் காற்று தர […]

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிப்பதால் காற்றின் தரக் குறியீடு கருவியில் 326-ஆக பதிவாகியுள்ளது.

டெல்லியில், காற்று மாசு அட்டவணையில் கடுமையான மாசு என்ற நிலையில் இருந்து மிகமோசம் என்ற நிலைக்கு காற்றின் தரம் சென்றுள்ளது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடிப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். தேசிய தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ள நொய்டாவில் காற்று தர குறியீடு 356 (மிக மோசம் பிரிவில்) ஆக உள்ளது. குருகிராமில் காற்று தர குறியீடு 364 என தொடர்ந்து மிக மோசம் பிரிவிலேயே உள்ளதால் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் மூச்சு திணறலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

காற்று தர குறியீடு பூஜ்யம் முதல் 50-க்குள் இருப்பது நலம் என்றும் 100 முதல் 200 என்பது மித அளவு என்றும், 200 முதல் 300 வரை காற்றின் தரம் மோசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 முதல் 400 வரை காற்றின் தரம் இருந்தால் மிகவும் மோசமானது என்றும், 400 முதல் 500 அல்லது அதற்கு மேல் அதிகரித்தால் அபாயகரமானது என்றும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அட்டவணைபடுத்தியிருக்கிறது.

டெல்லியில் அடுத்த 2 நாட்களுக்கு காற்றின் தரத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு காற்று மாசு அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu