டெல்லி, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் அமுல் வெண்ணெய் தட்டுப்பாடு

November 17, 2022

டெல்லி, உ.பி, அகமதாபாத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சந்தையில் அமுல் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பற்றாக்குறையால் போலி அமுல் வெண்ணெய் சந்தையில் பரவி வருகிறது. முதலில் அகமதாபாத்தில் இருந்து பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு டெல்லியில் 20 முதல் 25 நாட்களாக அமுல் பட்டர் சந்தையில் கிடைப்பதில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியாது. அதனையடுத்து விநியோகத் தட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுக்கும் பொருட்கள் வரவில்லை என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். பல […]

டெல்லி, உ.பி, அகமதாபாத் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சந்தையில் அமுல் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பற்றாக்குறையால் போலி அமுல் வெண்ணெய் சந்தையில் பரவி வருகிறது.

முதலில் அகமதாபாத்தில் இருந்து பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு டெல்லியில் 20 முதல் 25 நாட்களாக அமுல் பட்டர் சந்தையில் கிடைப்பதில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியாது. அதனையடுத்து விநியோகத் தட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுக்கும் பொருட்கள் வரவில்லை என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

பல ஊடக அறிக்கைகளின்படி, பல இந்திய மாநிலங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் மற்றும் டெலிவரி பயன்பாடுகள் அமுல் பிராண்டின் வெண்ணெய் விநியோகத்தில் பற்றாக்குறையைக் குறிக்கின்றன. இந்நிலையில் அமுல் கூறுகையில், சந்தையில் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு தீபாவளி பண்டிகையின் போது அதிக தேவை காரணமாக இருக்கலாம். மேலும் "அமுல் நிறுவனத்தில் வெண்ணெய் உற்பத்தி இயல்பை விட அதிகமாக உள்ளது. சந்தையில் அமுல் வெண்ணெய் வரத்து 4-5 நாட்களில் இயல்பு நிலைக்கு வரும்" என்று அமுல் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu