டெல்ஹிவெரி இழப்பு 159 கோடியாக உயர்வு

May 20, 2023

பிரபல தளவாட நிறுவனமான டெல்ஹிவெரி, நேற்று தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் இழப்பு 159 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தில் 120 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 10% சரிந்து, 1860 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் EBITDA இழப்பிலிருந்து மீண்டுள்ளது. முந்தைய காலாண்டில் 67 கோடியாக இருந்த எபிட்டா, மார்ச் மாத இறுதியில், 6 […]

பிரபல தளவாட நிறுவனமான டெல்ஹிவெரி, நேற்று தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் இழப்பு 159 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தில் 120 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 10% சரிந்து, 1860 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் EBITDA இழப்பிலிருந்து மீண்டுள்ளது. முந்தைய காலாண்டில் 67 கோடியாக இருந்த எபிட்டா, மார்ச் மாத இறுதியில், 6 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறைவாரியாக, விரைவு பார்சல் துறையில் நிறுவனம் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. காலாண்டு அடிப்படையில், 10 மில்லியன் ஷிப்மென்ட்கள் உயர்ந்துள்ளன. இந்தத் துறையில் மட்டுமே, 1177 கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. PTL துறையில் 19% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிராக்லோடு மற்றும் விநியோகச் சங்கிலி சேவைகள் வர்த்தகம் ஆகியவற்றில், முறையே 8% மற்றும் 6% உயர்வு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu