டெல் நிறுவனத்தில் 6650 பேர் பணிநீக்கம்

February 6, 2023

டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது 5% பணியாளர்களை, அதாவது 6650 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், தனிநபர் கணினிகளுக்கான தேவை பன்மடங்கு குறைந்துள்ளதால், பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் அனுப்பிய செய்தியில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல் நிறுவனத்தில், பணி அமர்வுகள் நிறுத்தம், பணியாளர் பயணங்கள் தவிர்ப்பு போன்ற செலவுகளைக் […]

டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது 5% பணியாளர்களை, அதாவது 6650 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், தனிநபர் கணினிகளுக்கான தேவை பன்மடங்கு குறைந்துள்ளதால், பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஜெஃப் கிளார்க் அனுப்பிய செய்தியில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல் நிறுவனத்தில், பணி அமர்வுகள் நிறுத்தம், பணியாளர் பயணங்கள் தவிர்ப்பு போன்ற செலவுகளைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், பணி நீக்க நடவடிக்கையை தவிர்க்கும் அளவுக்கு போதிய செலவுகள் குறையவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், டெல் நிறுவனம் தனது விற்பனையில் 6% சரிவை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. டெல் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான எச் பி நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 6000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu