நாடு முழுக்க 100 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால், இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.