நவராத்திரியை முன்னிட்டு பழனியில் தங்கரத புறப்பாடு ரத்து

October 10, 2023

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 15ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.அறுபடை வீட்டில் ஒன்றான பழனி முருகன் கோவில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கப்படுகிறது. இதனை அடுத்து பத்து நாட்கள் அங்கு விழா நடைபெறும். இந்த விழாவில் தினமும் 6 மணி முதல் […]

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 15ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.அறுபடை வீட்டில் ஒன்றான பழனி முருகன் கோவில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, நவராத்திரி ஆகிய விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கப்படுகிறது. இதனை அடுத்து பத்து நாட்கள் அங்கு விழா நடைபெறும். இந்த விழாவில் தினமும் 6 மணி முதல் பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் ஆகியவை நடைபெறும். கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 15-ம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி முதல் வழக்கம்போல் ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu