டிஜிட்டல் கிரெடிட் சேவை நிகழாண்டில் அறிமுகமாகும் - அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

February 10, 2023

இந்தியாவில், டிஜிட்டல் கிரெடிட் சேவை நிகழாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாக, சிறு வியாபாரிகளும் பெரிய வங்கிகளில் இருந்து கடன் பெற இயலும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் உத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "யுபிஐ சேவை போலவே அறிமுகமாகும் டிஜிட்டல் கிரெடிட் சேவை, டிஜிட்டல் இந்தியா கனவில் மற்றொரு மைல்கல்லாக அமையும். […]

இந்தியாவில், டிஜிட்டல் கிரெடிட் சேவை நிகழாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாக, சிறு வியாபாரிகளும் பெரிய வங்கிகளில் இருந்து கடன் பெற இயலும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் உத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "யுபிஐ சேவை போலவே அறிமுகமாகும் டிஜிட்டல் கிரெடிட் சேவை, டிஜிட்டல் இந்தியா கனவில் மற்றொரு மைல்கல்லாக அமையும். அடுத்த 10 முதல் 12 மாதங்களுக்குள், என் சி பி ஐ இதனை முன் நின்று ஏற்று நடத்தும்" என்று கூறினார். தொடர்ந்து, யுபிஐ சேவையை வாய்ஸ் பேஸ்ட் பேமெண்ட் முறையாக மாற்றும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், 18 இந்திய மொழிகளில் பேசி பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் யுபிஐ சேவை கொண்டுவரப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், நேபால், பூட்டான், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் யுபிஐ செயல்பாடுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், யுபிஐ முறையை சிங்கப்பூரின் பே நவ் முறையுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது" போன்ற அறிவிப்புகள் வெளிவந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu