டைனோசர்கள் அழிந்ததற்கானக் காரணத்தை அறிய முற்படும் ஆராய்ச்சி

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிந்து விட்டாலும், அவற்றைப் பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிந்து விட்டாலும், அவற்றைப் பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் அவற்றைப் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில், விண்ணில் இருந்து விழுந்த ஒரு விண்கல் தான் டைனோசர் இனம் அழிவதற்குக் காரணமாக இருந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் (Nature) இதழில் வெளிவந்த அவர்களின் கண்டுபிடிப்பு விண்கல் விழுந்த அடுத்த 60 நிமிடங்களுக்குள் உயிரிழந்த மீன்களின் எலும்பு கூராய்வை அடிப்படையான ஆதாரமாகக் கொண்டு விளக்கப்பட்டிருந்தது.

பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விண்கல் விழுந்த நாளில் இறந்த மீன்களின் புதைப்படிவத்தை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் கிடைத்துள்ள தகவல்கள்: விண்கல் பூமியில் விழுந்த பொழுது, கண்டத் தட்டுகள் அதிர்ந்து, பெரியளவிலான கடல் அலைகளை உருவாக்கியது. இதனால், அதிக அளவில் மீன்கள் உயிருடன் புதைக்கப்பட்டன. இந்த புதைப்படிவங்கள் எவ்வித வேதியியல் மாற்றங்களுக்கும் உள்ளாகாமல் இருந்துள்ளன. அவற்றில் எலும்புகள் மற்றும் சதைப்பகுதிகள் ஆகியவை சிதையாமல் கிடைத்துள்ளதால் அவற்றில் எக்ஸ்ரே ஆய்வுகள் மற்றும் கனிம ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த எலும்புகளில் கிடைத்துள்ள தனிமக்கூறுகள் மூலம், மரங்கள், மிருகங்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் அவற்றின் உணவு முறை ஆகியவற்றை அறிய முடிகின்றது. மேலும், இந்த விண்கல் தாக்கப் பேரழிவு வசந்த காலம் மற்றும் கோடைக்கு காலத்திற்கு இடையில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் அறியப்படுகிறது. பாலூட்டிகள், ஆமைகள்,முதலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளில் சில இனங்கள் ஆகியவை இந்தப் பேரழிவில் பிழைத்திருக்க, டைனோசர்கள் ஏன் அழிந்தன என்ற கேள்விக்கும் இந்த ஆய்வின் மூலம் பதில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

4
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu