இன்று முதல் சென்னை - மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை மஸ்கட்டுக்கு சென்னையிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மூலம் மட்டுமே நேரடி விமான சேவை இயங்கி வந்தது. இந்த விமான சேவை காலை மற்றும் மாலை என தினமும் இரண்டு விமான சேவைகளை இயக்கி வந்தது. இவை தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை நடத்தாமல் இருந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏர் நிறுவனம் மஸ்கட் - சென்னை-மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.