இந்தியாவின் நேரடி வரி வசூல் 24% உயர்ந்துள்ளது - நிதி அமைச்சகம்

October 10, 2022

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 8ம் தேதி வரை, இந்தியாவின் நேரடி வரி வசூல் 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த வரி வசூல் 8.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் மூலம் வசூல் ஆகியுள்ள வரி 16.74% உயர்ந்துள்ளது என்றும், தனிநபர் வருமான வரி வசூல் 32.3% உயர்ந்துள்ளது என்றும், நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் […]

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 8ம் தேதி வரை, இந்தியாவின் நேரடி வரி வசூல் 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த வரி வசூல் 8.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள் மூலம் வசூல் ஆகியுள்ள வரி 16.74% உயர்ந்துள்ளது என்றும், தனிநபர் வருமான வரி வசூல் 32.3% உயர்ந்துள்ளது என்றும், நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், வசூல் ஆன வரித் தொகையை ஒப்பிடும் பொழுது இந்த வருடம் 23.8% கூடுதலாக வரி வசூலாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: "வசூல் செய்யப்பட்டுள்ள நேரடி வரித் தொகையில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை கழித்தால், 7.45 லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வசூலாகி உள்ளது. கடந்த வருட வரி வசூலுடன் ஒப்பிடுகையில், இது 16.3% கூடுதலாகும். அத்துடன், 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான, நேரடி வரி வசூல் குறித்த மொத்த பட்ஜெட் கணிப்பில் இது 52.46% ஆகும். அதே வேளையில், கடந்த வருடம் 7.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடப்பு ஆண்டில் 1.53 லட்சம் கோடி ரூபாய், வரி வசூலில் இருந்து திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 81% கூடுதல் ஆகும். அத்துடன், ஒவ்வொரு மாதமும், ஜிஎஸ்டி வரி வசூல், 1.45 முதல் 1.46 லட்சம் கோடி வரை, என்ற கணக்கில் நிலை பெற்று உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

வருமான வரி வசூல் என்பது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை குறிப்பதாகும். ஆனால், இந்தியாவில், வலுவான வரி வசூல், தொழில் வளர்ச்சியின் எதிர் திசையில் பார்க்கப்படுகிறது. எனவே, பொருளாதார வல்லுநர்கள் சிலர் “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபங்கள் இந்தியாவை நகர்த்தி வருகின்றன” என்று கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu