இந்திய உற்பத்தி துறையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2023 மே மாதத்தில், இந்தியாவின் உற்பத்தித்துறை வளர்ச்சி குறியீட்டு எண் பிஎம்ஐ 58.7 ஆக பதிவானது. இது முந்தைய 31 மாதங்களில் பதிவான அதிகபட்ச பி எம் ஐ ஆகும். அதன் பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் 55.5 ஆக குறைந்தது. அதன் பிறகு, ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த பி எம் ஐ, 16 வருட உச்சமாக, கடந்த மார்ச் மாதத்தில் 59.1 ஆக பதிவானது. ஆனால், அதற்கு அடுத்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக சரிவை சந்தித்துள்ளது. எனினும், பிஎம்ஐ குறியீட்டு எண்ணுக்கான நடுநிலை வருமான 50 ஐ தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த 35 மாதங்களாக 50 ஐ தாண்டி பிஎம்ஐ பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி சீரான நிலையில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.