முதல்முறையாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பாரத் யூரியா உரம் விநியோகம் தொடங்கியது.
ஒரே கட்டணம் மற்றும் ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற உரங்களை தயாரிக்கும் எல்லா உர நிறுவனங்களும், ‘பாரத்’ என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் முத்திரை, பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வர்க் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்பிக் நிறுவனம், இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமது உற்பத்தியின் வாயிலாக விநியோகம் செய்கிறது. ஒரே நாடு ஒரே உரம் என்ற கொள்கை அடிப்படையில் பாரத் யூரியா, ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 5 மாவட்டத்திற்கு 2100 டன் பாரத் உர விநியோகம் செய்யப்படுகிறது.














